APOLLOPARTHIBAN: Hard Disk

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, December 14, 2011

Hard Disk


Hard Disk என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக்கணி, மடிக்கணி, குறுமடிக்கணி (net top), போன்ற கணினிகளில் கணினியைப் பயன்படுத்தத் தேவையான இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம் (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (HDD) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (Disk), 0,1 என்னும் Binary முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode)
செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் நிமிடத்திற்கு பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லது, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு Write என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் படிக்கவும் (Read) முடியும்.


வன்தட்டு நிலை நினைவகமத்தை (HDD) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே 1956 இல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது [1]). ஆனால் இன்று இத்தகைய வநிநிகள் கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றது.
இந்த Hard Disk 40 Pin கொண்ட IDE Cable மூலம் Mother Board இல் உள்ள IDE Solt இல் இணைக்கப்படும்.

--

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget