ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் புத்தகங்களை வாசிக்க உதவும் தளங்கள் எவை என்பது தான்?
ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய சிலிக்கான ஷெல்ப் தளத்திற்கு நன்றி.(தமிழில் புத்தகங்கள் தொடர்பான அருமையான வலைப்பதிவு இது)
ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன.அரசியல்,இலக்கியம்,உடல் நலம்,இசை என வகைகளின் பட்டியல் நீள்கிறது.
அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா,, அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிறது.
நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்றன.
ஓராண்டுக்கும் மேலாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்கிறியவர்.
இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்.
இணையதள முகவரி;http://www.openreadingroom.com/
--
No comments:
Post a Comment