APOLLOPARTHIBAN: இணைய வேகம் குறைகிறதா? super anti spyware கொண்டு இணையவேகத்தை அதிகப்படுத்த

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, February 23, 2012

இணைய வேகம் குறைகிறதா? super anti spyware கொண்டு இணையவேகத்தை அதிகப்படுத்த


வணக்கம் நட்புகளே.. உங்கள் இணைய வேகம் குறைகிறதா? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்.. பெரும்பாலான காரணம் இதுவாகத்தான் இருக்கும். 

அதாவது இணையத்திலிருந்து கணினியைத் தாக்கும் வைரஸ் போன்றவைகளால் இணையத்தில் வேகம் பெருமளவு குறைந்துபோகும். 

மற்றொரு முக்கிய காரணம், ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மால் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் மென்பொருள்கள்(softwares), படங்கள்(Images), மற்றும் பலதரப்பட்ட கோப்புகள் ஆகியவைகளே காரணமாக இருக்கும். இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு முறைமட்டுமே பயன்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தாமலேயே இருக்கும் எத்தனையோ மென்பொருள்கள்(softwares), கோப்புகள்(documents), படங்கள்(images), வீடியோக்கள்(videos) போன்றவைகளை நாம் கணினியிலிருந்து நீக்காமலே வைத்திருப்போம். 

மேலும் நம் கணினியில் உள்ள Registry, Memory, Cookies போன்றவற்றுக்குள் Malware, Trojan Horse,Trojan.Agent,Adware Tracking Cookies,Application Agent போன்ற வைரஸ்கள் இறங்கி தன்னுடைய வேலையைக் காட்டிக்கொண்டிருப்பதனாலேயே உங்கள் கணினி, மற்றும் இணைய வேகம் வெகுவாக குறைந்து காணப்படும்.

இவற்றுக்கெல்லாம் ஒரு ஒரு மென்பொருளைக்கொண்டே தீர்வு காணலாம். இம்மென்பொருளானது சாதாரணமாக நமது கணினியில் இருக்கும் Antivirus, Internet Security, Anti-virus Scanner போன்ற மென்பொருட்களால் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், வைரஸ்களையும் கூட நீக்கி கணினி மற்றும் இணையவேகம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. 

மென்பொருளின் பெயர்: SUPERAntiSpyware Pro 4.53.1000
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி
-- 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget