இணையப் பயன்பாடு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டிய ஓர் அம்சமாக நம் வாழ்க்கை முறை மாறி வருகிறது. எதனை வேண்டுமானாலும், இணையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
எனவே இணைய இயக்கம் எந்த அளவிற்கு வேகமாக இருக்க முடியுமோ, அந்த அளவு வேகத்தினை நாம்
விரும்புகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் பிரவுசரில் இணைய தளங்கள் மிக வேகமாக இறங்கி, இயக்க தயாராக இருக்க வேண்டும் எனவே விரும்புகின்றனர்.
பத்துக்கும் மேற்பட்ட டேப்களில் இணைய தளங்களைத் திறந்து வைத்து, அவை அனைத்தும் குறிப்பிட்ட தளங்களைக் காட்ட வேண்டும் எனவே எதிர்பார்க்கின்றனர்.
இது சாத்தியமா? சாத்தியமோ இல்லையோ, சில ட்யூனிங் தந்திரங்களைக் கையாண்டால், நிச்சயம் ஓரளவிற்கு கூடுதலான வேகத்தில் இணைய அனுபவம் கிடைத்திடுவதனைக் காணலாம். அந்த நடவடிக்கைகளை இங்கு பட்டியலிடலாம்.
1. வேகமான பிரவுசரைப் பயன்படுத்துக:
நமக்குக் கிடைக்கும் அனைத்து பிரவுசர்களும் ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் பிரவுசர்களில் இயங்கும் வேகத்தினை மட்டும் அடிப்படையாக வைத்துப் பார்த்தால், கூகுள் தரும் குரோம் பிரவுசர் முதல் இடத்தைப் பிடிக்கிறது. நீங்கள் ஏற்கவே பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் வாடிக்கையாளராக இருந்தால், குரோம் பிரவுசரைப் பயன்படுத்திய முதல் நாளிலேயே, அதன் கூடுதல் வேகத்தை உணர்வீர்கள். குரோம் பிரவுசரில், முகவரிகளுக்கான கட்டத்தையே தேடலுக்கான கட்டமாகவும் பயன்படுத்தலாம்.
2. பிளாஷ் இயக்க நிறுத்தம்:
அனைத்து பிரவுசர்களும் இப்போது பிளாஷ் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நுட்பம் இல்லாமல் இயங்குவது முழுமையாக இருக்காது. எனவே பிளாஷ் இயக்கம் நமக்கு அனைத்து பிரவுசர்களிலும் கிடைக்கிறது.
ஆனால் பிரச்னை என்னவெனில், பிளாஷ் சற்று வேகம் குறைவாகவே இயங்குகிறது. இதனால், பிரவுசர் இயங்கும் வேகமும் தாமதப்படுகிறது. எனவே, பிளாஷ் இயக்கத்தினை நிறுத்தி வைத்து, நமக்குத் தேவைப்படுகையில் மட்டும் அதனை இயக்க வேண்டும்.
இதற்கு ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் உதவிடுகிறது. குரோம் பிரவுசருக்கான பிளாஷ் பிளாக் (Flash Block) http://www.chromeextensions.org/appearance-functioning/flashblock/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பிளாஷ் பிளாக் https://addons.mozilla.org/enUS/firefox/addon/flashblock/ என்ற முகவரியில் கிடைக்கிறது.
3. தற்காலிக பைல்களுக்கு தனி டிஸ்க்:
ராம் நினைவக டிஸ்க் இயக்கம், ஹார்ட் டிஸ்க் இயக்கத்தினைக் காட்டிலும் கூடுதல் வேகம் கொண்டதாக இருக்கும். எனவே, இணைய உலாவின் போது உருவாக்கப்படும் தற்காலிக பைல்களுக்கு, ராம் நினைவக டிஸ்க்கினைப் பயன்படுத்துவது, பிரவுசரின் இயக்க வேகத்தினைக் குறைக்கும். அதற்குப் பதிலாக, இந்த பைல்களுக்கு வேறு வகை நினைவகத்தினைப் பயன் படுத்தலாம். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.
4. டூல் பார்களை நீக்குக:
பிரவுசர்களில் கிடைக்கும் டூல்பார்கள் நம் மானிட்டர் திரையின் பெரும் இடத்தினை எடுத்துக் கொள்கின்றன. இவற்றை நீக்குவதன் மூலம் நமக்கு இணைய தளத்தினைக் காண அதிக இடம் கிடைக்கிறது. இந்த டூல் பார்கள், டேட்டாவினை அனுப்பிப் பெறும் பின்புலப்பணியில் ஈடுபடுவது நமக்குத் தெரியாது. இவற்றை மூடிவிட்டால், அல்லது பயன்பாட்டினை நிறுத்திவிட்டால், பிரவுசரின் பணி ஒருமுகப்படுத்தப்பட்டு வேகப்படுத்தப் படும். எனவே அதிக எண்ணிக்கையில் டூல்பார்களை வைத்திருந்தால், பிரவுசரின் வேகம் குறையும் என்பது உண்மையாகிறது. இவற்றைக் குறைக்கலாம்.
5. விண்டோ வேண்டாம்; டேப் போதும்:
அதிக எண்ணிக்கையில் டேப்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஆனாலும், வேகமான இயக்கத்திற்கு இவை பெரிதும் உதவுகின்றன. ஒரே விண்டோவில், பல இணைய தளங்களுக்கான டேப்களை வைத்து இயக்குகையில், இவற்றை நிர்வகிப்பது எளிதாகிறது. தேவைப்படாதவற்றை மினி மைஸ் செய்து, தேவைப்படும் தளம் உள்ள விண்டோவினை மட்டும் திறந்து வைத்து இயக்குவது, பிரவுசருக்கான இயக்க வேகத்தினை அதிகப்படுத்தும். அது மட்டுமின்றி, குரோம் போன்ற பிரவுசர்களில் ஒவ்வொரு டேப்பும் தனி இயக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஒரு தளம் கொண்ட இணைய தொடர்பு கிராஷ் ஆனாலும், மற்ற டேப்புகளுக்கான இணைய இயக்கம் வேகத் தட்டுப்பாடு இன்றி இயங்கிக் கொண்டு இருக்கும்.
No comments:
Post a Comment