வழிமுறை:
- முதலில் இந்த லிங்கில் சென்று நீட்சியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து New Tab க்ளிக் செய்தால் My Chrome Theme என்ற புதிய வசதி வந்திருக்கும் அதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் START MAKING THEME என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
- அடுத்து UPLOAD IMAGE என்பதை க்ளிக் செய்து கணினியில் சேமித்து வைத்திருக்கும் உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து ADJUST POSITION என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து Continue Step2 என்பதை க்ளிக் செய்யவும். இந்த பகுதியில் உலவியின் நிறங்களை உங்களின் விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- நிறங்களை தேர்வு செய்தவுடன் மேலே உள்ள Continue to Step 3 என்பதை க்ளிக் செய்யவும்.
- இதில் கீழே உள்ள PREVIEW MODE க்ளிக் செய்தால் உங்களுடைய தீம் எப்படி இருக்கு என பார்த்து கொள்ளலாம்.
- முடிவில் உங்கள் தீமுக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுத்து MAKE MY THEME என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்கள் குரோம் தீம் உருவாகிவிடும். INSTALL MY THEME என்ற பட்டனை அழுத்தி உங்களுடைய சொந்த கைவண்ணத்தில் உருவான அழகான தீமை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இப்படி உங்களுக்கு தேவையான தீம்களை உருவாக்கி மகிழுங்கள்.
No comments:
Post a Comment