APOLLOPARTHIBAN: பிரவுசருக்குள் பிரவுசர்.....

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Sunday, May 6, 2012

பிரவுசருக்குள் பிரவுசர்.....

ஒரு பிரவுசரில் இன்டர்நெட் வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தளத்தை வேறு ஒரு பிரவுசரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்கள்.உடனே என்ன செய்வீர்கள்? அந்த பிரவுசரை விட்டு விலகி, அடுத்த பிரவுசரை இயக்கி, குறிப்பிட்ட தளத்தின் முகவரியினை அமைத்து இயக்கிப் பார்ப்பீர்கள். இதற்குப் பதிலாக அதே பிரவுசரில் ஒரு ஐகானை அழுத்துவதன் மூலம் மற்ற பிரவுசர்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

இந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ளது. ஆம். பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் இருக்கையில் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்களை இயக்க வழி தரும் ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன. 


கூகுள் குரோம் தொகுப்பிற்கான ஆட் ஆன் புரோகிராம்https://addons.mozilla.org/en-US/firefox/addon/
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கானதுhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/
சபாரிக்கான புரோகிராம் https://addons.mozilla.org/en-US/firefox/addon/
ஆப்பராவிற்கான புரோகிராம் https://addons.mozilla.org/en-US/firefox/addon என்ற முகவரியிலும் கிடைக்கின்றன. 


தேவைப்படும் பிரவுசருக்கான ஆட் ஆன் புரோகிராமில் கிளிக் செய்து, பின் Add to Firefox என்ற பட்டனை அழுத்திவிட்டால் அதற்கான புரோகிராம் இணைந்துவிடும். 


பின் மீண்டும் பயர்பாக்ஸை இயக்கி, ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பார்க்கையில் ரைட் கிளிக் செய்தால் View this page in ......" என குறிப்பிட்ட அந்த பிரவுசரின் பெயர் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால்,உடன் அந்த பிரவுசர் திறக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த தளம் அதில் காட்டப்படும்

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget