Block ads on Websites
வணக்கம் நண்பர்களே..! நாம் தொடர்ந்து ஒரு இணையதளத்தைப் பார்க்கும்போது பாப் அப் விண்டோக்கள் வந்து நம்மை இம்சைப்படுத்தும். குறிப்பாக நாம் படிக்கும் கட்டுரைகள், பதிவுகள், கவிதைகள் என நாம் விரும்பிப் படித்துக்கொண்டிருக்கும்போது , அவற்றை முழுமையாக படிக்க முடியாத படி பாப் அப் விண்டோக்கள் அவ்வப்போது தோன்றும். இதனால் படிக்கும் நமக்கு ஒரு வித எரிச்சல் உண்டாகும். தோன்றும் Popup window க்களை Close செய்ய முயற்சித்தால் தவறி அந்த விளம்பரங்களின் மீது கிளிக் செய்துவிடுவோம். இதனால் நாம் படிக்கும் பக்கத்திலிருந்து வேறொரு பக்கத்திற்கு சென்றுவிடும். இத்தகைய தொல்லைகளை தவிர்க்க AdBlock என்ற ஆட்ஆன் தொகுப்பு(Plugin) பயன்படுகிறது. முக்கியமாக நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் கூகுள் குரோம், FireFox ஆகிய பிரௌசர்களுக்கு அந்த ஆட்ஆன் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது
கீழ்க்கண்ட இணைப்பின் வழி சென்று உங்களுக்குத் தேவையான Plugin டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் உலவும் தளத்தில் பாப் அப் விண்டோக்கள், அல்லது விளம்பரங்கள் தோன்றினால் ADBLOCK என்பதை கிளிக் செய்துவிட்டால் போதும். இனி நீங்கள் அந்த தளத்தை ஒவ்வொரு முறையும் திறக்கும்போது தளத்தில் விளம்பரங்கள் மறைந்துவிடும்.
மீண்டும் விளம்பரம் தோன்ற வேண்டும் என நீங்கள் நினைத்தால் ரைட்கிளிக் செய்து ADBLOCK மீது சொடுக்கி Don’t Run on this page என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்போது மீண்டும் தளத்தில் விளம்பரங்கள் தோன்றும்.
இந்த ADD ON தொகுப்பு அனைத்து தளங்களிலும் செயல்படும். குறிப்பாக google search ல் தோன்றும் விளம்பரங்களையும் இது தடை செய்கிறது. Facebook, google +, twitter போன்ற சமூகதளங்களில் தோன்றும் விளம்பரங்களையும் தடை செய்கிறது. விளம்பரங்கள் படம், எழுத்து என எவ்வகையான விளம்பரமாக இருந்தாலும் அனைத்தையும் தடைசெய்வது இந்த ஆட்ஆன் தொகுப்பின் வேலையாகும்.
ஃபயர்பாக்சிற்கான ஆட்ஆன் டவுன்லோட் செய்ய:https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom
கூகிள் குரோம் ஆட்ஆன் டவுன்லோட் செய்ய:https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom
http://adblockplus.org/en/
என்ன நண்பர்களே இனி விளம்பரத் தொல்லையின்றி நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான வலைப்பூ அல்லது வலைதளத்தை தொடர்ந்து வாசிக்கலாம்தானே.!!
No comments:
Post a Comment