APOLLOPARTHIBAN: MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, April 21, 2012

MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு



MS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம்.முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Ofice 2007 இல் வித்தியாசமான பைல் நீட்டிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.
முன்னைய பதிப்புகளில் பைல் நீட்டிப்பாக Word, Excel, மற்றும் PowerPoint மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப் படுகின்றன.


ஆனால் Ofice 2007 இல.docx, xlsx, .pptx ஆகிய நீட்டிப்புகள் Word, Excel, PowerPoint இல் பயன்படுத்தப் படுகின்றன. இந்தப் புதிய பைல் நீட்டிப்புகள் முன்னைய பதிப்புகளோடு ஒத்திசைவதில்லை.


அதனாலேயே Office 2002 மற்றும் Office 2003 பதிப்புகளில் இந்த docx, xlsx மற்றும் .pptx பைல் நீட்டிபுகளைக் கொண்ட பைல்களைத் திறக்க முடிவதில்லை.


எனினும் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தபடும் நீட்டிப்புகளோடு பைல்களைச் சேமிக்கக் கூடிய வ்சதி Office 2007 இல் தரப்படுள்ளது. நீங்கள் அடிக்கடி பழைய பதிப்புகளில் உள்ள பைல் நீட்டிப்புகளையே பயன் படுத்துகிறீர்கள் அல்லது Office 2007 நிறுவப்பட்டிராத கணிகளில் உங்கள் பைல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தப்படும் நீட்டிப்புகளோடே சேமிக்க வெண்டி வரும்.


Office 2007 இல் பைலைச் சேமிக்கும் போது இயல்பு நிலையில் பழைய நீட்டிப்புக்களுடனேயே சேமிக்குமாறு செய்து விட்டால இந்தப் பிரச்சினை எழாது.


Word 2007 இல் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது .doc எனும் நீட்டிப்பை இயல்பு நிலைக்கு மாற்றப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்க்ள்.


முதலில் MS- Word 2007 ஐத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவின் கீழ் Word Options தெரிவு செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் இடது புறம் Save தெரிவு செய்யுங்கள்.


அடுத்து வீண்டோவின் வலப்புறம் Customize how documents are saved என்பதைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Save File in this format எனுமிடத்திலுள்ள ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து Word 97-2003 Document (*doc) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.


இப்போது word ல் உருவாக்கும் அனைத்து பைல்களும் மேற்சொன்ன formatலேயே சேமிக்கப்படும்.

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget