புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive, Spam, Delete , போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் . கீழே படத்தில் உள்ளது போல.
இது சிலருக்கு வசதியாக இருக்கலாம் , ஆனால் அவசர கதியில் மெயில் செக் செய்கிறவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்புவர்களுக்கு தலைவலியாகவே இருக்கிறது !
இவை பெயர் வடிவிலே இருந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? சரி அதை எப்படி மாற்றுவது என பார்ப்போம் வாருங்கள் .
முதலில் செட்டிங்க்ஸ் க்குள் போகவேண்டும் , உங்கள் மெயில் இன் வலது மூலையில் இருக்கும் Settings ஐ கிளிக் செய்யவும்.
பின்பு அதிலிருக்கும் General ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள். அதில் Button Labels என்ற வசதியில் Icons என்பது தெரிவாகி இருக்கும் அதில் இப்போது நீங்கள் Text என்று தெரிவு செய்ய வேண்டும்.
இப்போது Save செய்து விடுங்கள். இனி உங்கள் Tool Bar-இல் உங்களுக்கு எல்லாமே Text ஆக கீழே படத்தில் உள்ளது போல காட்சியளிக்கும்.
அருமை.!
ReplyDelete