நாம் மொபைல் போன் உபயோகிக்க ஆரம்பித்த காலம் தொட்டு போனில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத் தான் பெரிதும் விரும்புகிறோம்.
'மௌனத்தை விட இந்த உலகில் மிகச் சிறந்த மொழி வேறேதும் இல்லை' என்று சொல்வார்கள்.இது எஸ்.எம்.எஸ் க்கு மிகவும் அழகாக பொருந்திப் போகிறது.காரணம் நாம் மொபைலில் பேசித் தீர்க்க முடியாத சில விஷயங்களை எஸ்.எம்.எஸ் மூலமாக பேசி தீர்த்து விடுவோம்.
எஸ்.எம்.எஸ் கூட நாம் மற்றவர்களிடம் மௌனமாய் பேசுவதைப் போல ஒரு மொழி தான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் சேவைக்கு மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்,ஒருநாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ் இலவசம்,ஒரு பைசாவுக்கு எஸ்.எம்.எஸ் என்று பல சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.
இதை சலுகைகள் என்று சொல்வதை விட மறைமுகக் கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் எந்த சலுகைகளையும் நமக்கு தர மாட்டார்கள்.
அதனால் மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு 'எஸ்.எம்.எஸ்'சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.
அவைகளை இங்கே உங்களுக்காக தொகுத்து தருகிறேன்.
பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர், மலேசியா,யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலிலிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம்.இது ஜாவா வகையை சார்ந்த அப்ளிகேஷன் என்பதால் நோக்கியா,சாம்சங்,சோனிஎரிக்சன்,எல்.ஜி,மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது.
இந்த அப்ளிகேஷன் நமது மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது.இதன் ஒரேகுறை 80 எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.
இந்த இணையதளமும் கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களின் பேவரைட் இணையதளம்.கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப தினமும் 26 லட்சம் பேர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.160 எழுத்துகள் வரை நாம் எஸ்.எம்.எஸ் டைப் செய்து அனுப்ப முடியும்.
மொபைலுக்கான பிரத்யேகமான அப்ளிகேஷனை இவர்கள் இன்னும் தரவில்லை என்றாலும் நமது மொபைலின் பிரௌசரில் http://m.way2sms.com என்று டைப் செய்து இந்த இணையதளம் மூலம் நாம் மற்றவர்களுக்கு அளவற்ற இலவச எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.இங்கு வெளிநாடுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி இல்லை.கூடுதல் சேவையாக நமது இமெயில்களை மொபைலில் படித்துக் கொள்ளும் வசதியையும் தருகிறார்கள்.
120 எழுத்துகளை மட்டுமே டைப் செய்து மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.மூன்று கட்டண திட்டங்கள் உண்டு அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் குறைந்த கால்கட்டணங்களில் வெளிநாடுகளுக்கு பேசிக்கொள்ளவும்,இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளவும் முடியும்.இதில் இருக்கும் free connect மூலம் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.
பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் மொபைல்களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷனும் உண்டு.
way2sms இணையதளம் போல் உள்ளது. இந்தியாவுக்குள் எந்த மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.தனியாக மொபைலில் பயன்படுத்த அப்ளிகேஷன் இல்லை.
300 எழுத்துகள் வரை சப்போர்ட் செய்கிறது.மொபைலில் பயன்படுத்த தனி அப்ளிகேஷன் இல்லை.
மிக நீளமான எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும் இணையதளம் இதுதான்.இணையதளத்தின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட 440 எழுத்துகளை டைப் செய்து அனுப்பலாம்.மொபைலுக்கான தனி அப்ளிகேஷன் இல்லை.
http://m.ibibo.com முகவரி மூலம் உங்கள் மொபைலில் இலவச எஸ்.எம்.எஸ் சேவையை பயன்படுத்தலாம். மெயில்,போட்டோஸ்,மியூசிக்,கேம்ஸ் என பல சேவைகள் இதில் உண்டு.
மொபைலுக்கான பிரத்யேகமான எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன் இது. ஜாவா வகை என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போன்களை இது ஆதரிக்கிறது.இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர்,கேமிங் போர்டல் என இதர சேவைகளும் உண்டு.
அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.
இந்த அப்ளிகேஷனை மொபைலில் பயன்படுத்தும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு,சிம்பியன்,ஜாவா,விண்டோஸ் ஒ.எஸ் என எல்லாவகை ஒ.எஸ் மொபைல்களுக்கும் தனி அப்ளிகேஷனாக பயன்படுத்தலாம். இலவசம் என்று சொன்னாலும் சேவையை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள்.
No comments:
Post a Comment