APOLLOPARTHIBAN: Autorun.inf வைரசை எதுவித toolம் பாவிக்காமல் அழித்தல்

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Sunday, July 31, 2011

Autorun.inf வைரசை எதுவித toolம் பாவிக்காமல் அழித்தல்

முதல் பதிவில் Autorun.inf வைரஸ் கணனிக்குள் உடபுகாமல் தடுப்பது என்பதை பார்த்தோம், நான் அப்பதிவில் குறிப்பட்டது போன்று இன்று பார்க்கபோவது Autorun.inf வைரஸ் தாக்கப்பட்ட பென் ட்ரைவ் அல்லது ஹாட் டிஸ்க் கிலிருந்து Autorun.inf வைரஸை நீக்குவது எப்படி என்பதாகும்.
நீங்கள் Autorun.inf வைரஸை அழிக்க (Delete) செய்தாழும் மீண்டும் மீண்டும் அவை வந்துக்கொண்டே இருக்கும். இது நம் வேலைகளை செய்வதற்கு தடையாக இருப்பதால் பல நெருக்கடிகளை நமக்கு தரலாம், எனவே இதை அழிக்க பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

01. Start சென்று Run கிலிக் செய்யுங்கள்.
02. அங்கு cmd என டைப் ok செய்து பட்டனை அழுத்துங்கள்.



03. பின் வரும் command prompt வின்டோவில் பென்டரைவ் அல்லது ஹாட் டிஸ்க்கின் எழுத்தை டைப் செய்யுங்கள் . example d:


04. பின்னர் attrib என டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள். பென்ட்ரைவில் உள்ள பைல்களை (File) காட்டும்.
05. அதில் autorun.inf காட்டுகின்றதா என பாருங்கள்.


06. பின் attrib -s -h -r autorun.inf என டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
07. -s அதன் முறைமையின் பண்பை (system attribute) நீக்க -h ஒழிந்திருக்கும் பண்பை(hidden attribute) நீக்க -r வாசிப்பு மட்டும் பண்பை (read only attribute) நீக்க.


08. பிறகு command prompt வின்டோவில் del autorun.inf என டைப்செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.


09. பென்ட்ரைவரை remove செய்து மீண்டும் plug செய்யுங்கள் அல்லது கணனியைrestart செய்யுங்கள்.
அவ்வளவே தான் Autorun.inf வைரஸ் நீக்கப்பட்டுவிட்டது.


பின் கீழுள்ள USB Vaccine மென்பொருளை நிறுவுவீராயின் சிறந்த பலனை தரும், இது கட்டாயம் நிறுவ வேண்டுமென்பதில்லை.
மென்பொருள் தரவிறக்க இங்கே Click செய்யுங்கள்

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget