APOLLOPARTHIBAN: விரைவாக கோப்புகளை காப்பி செய்ய

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, July 28, 2011

விரைவாக கோப்புகளை காப்பி செய்ய



நாம் கணிணியில் பலவிதமான கோப்புகள் வைத்திருப்போம் . அவற்றை நம் வசதிக்கேற்றவாறு அடிக்கடி இடமாற்றம் செய்வோம் . அப்படி இடமாற்றம் செய்யும் போது ஒரு Drive விட்டு ஒரு Drive காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது அதாவது உதாரணமாக Drive(C:) லிருந்து Drive(E:) காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது சற்று வேகம் குறைவாக இருக்கும். மேலும் இடமாற்றம் செய்யப்படும் கோப்பு பெரிதாக இருப்பின் மேலும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் .

TeraCopy என்னும் மென்பொருள் விரைவாக காப்பி செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது . இது சாதாரணமாக காப்பி மற்றும் இடமாற்றம் செய்வதை காட்டிலும் விரைவாக செய்கிறது .இதற்க்கு முதலில் TerCopy மென்பொருளை நிறுவிய பின் இடமாற்றமோ காப்பியோ செய்யவேண்டிய கோப்பின் மீது Right Click செய்து அதில் TeraCopy என்பதை கிளிக் செய்க


பின் தோன்றும் Window வில் Copy அல்லது Move வசதியை தேர்வு செய்க.மேலும் கோப்பை இடமாற்றமோ காப்பியோ செய்ய வேண்டிய இடத்தையும் தேர்வு செய்க .


தேர்வு செய்த பின் TeraCopy இடமாற்றமோ அல்லது காப்பியோ செய்வதை தொடங்கி விடும் . மேலும் இதில் இடமாற்றத்தையோ காப்பியையோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் Pause வசதியும் உண்டு .





இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget