APOLLOPARTHIBAN: கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்த

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, September 20, 2011

கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்த


"இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம். இங்கு எது சரி அல்லது எது உதவியாய் இல்லை என்று பகுத்தறிவது எளிதல்ல. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டருக்கு உரமூட்ட, அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.

1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக: புதிய கம்ப்யூட்டர்களில், மால்வேர் (Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில், இவை உங்கள் கம்ப்யூட்டரை அடைந் திருக்கும். சில நாட்களாக, கம்ப்யூட்டர் இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால், அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம். ஒரு மால்வேர் கம்ப்யூட்டர் ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் அமர்ந்து இயங்கிக் கொண்டு, ஸ்பேம் எனப்படும் இமெயில்களை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பலாம்; உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தவாறே, தொடர்ந்து பரவ அடுத்த கம்ப்யூட்டர்களைத் தேடலாம்; நாம் அமைத்துள்ள தந்திர சுருக்கு வழிகளைக் கண்டறியலாம் மற்றும் ஹேக்கர்கள் விரும்பும் பல கெடுக்கும் செயல்களில் ஈடுபடலாம். தான் மட்டும் தனியாக இடம் பிடிக்காமல், தன்னுடன் சில வைரஸ்களையும் அழைத்து வந்து இடம் பிடிக்கும் மால்வேர் புரோகிராம்களும் உண்டு. இதனைக் கண்டறிய நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த வேண்டியது வைரஸ் ஸ்கேன் புரோகிராம் ஆகும். கண்டறிந்து நீக்கக் கூடிய ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும்.

2. வீடியோ கார்டை மேம்படுத்துக: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட், தன்னிடம் வரும் சுமையை ஏற்றுச் செயல்படும் அளவிற்குத் திறன் குறைந்த தாக இருந்தால், நிச்சயம் கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகம் குறையும். குறிப்பாக, கேம்ஸ் விளையாடுபவர்கள், கிராபிக்ஸ் புரோகிராம் இயக்குபவர்களுக்கு இது நேரலாம். இவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டினைக் கூடுதல் திறனுக்கு உயர்த்த வேண்டும்; அல்லது இரண்டாவதாக ஒன்றை இணைக்க வேண்டும்.

3. வேகமாக இயங்கும் ட்ரைவ் தேவை: பல வேலைகளில், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்குக் காரணம் அதில் இணைக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே. ஒரு ட்ரைவின் சில அம்சங்கள் – RPMs, cache size, seek speed, and transfer rate– அதன் செயல் வேகத்தைக் காட்டும். இவற்றின் மூலம் வேகமாக இயங்கக் கூடிய ஹார்ட் டிஸ்க் கினை வாங்கி இணைக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கின் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் அவற்றை மாற்றலாம்.

4. பிரச்னைகளுக்குத் தீர்வு காணல்: ஒரு சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்பது அதன் ஹார்ட்வேர் பிரச்னையாகும். எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டரின் சி.பி.யு. விலிருந்து உண்டாகும் வெப்பம் தணிக்கப் பட்டு, குளிர்வாக இல்லை என்றால், சிஸ்டம் செயல்படும் வேகம் குறையலாம். அதே போல, டிஸ்க்குகளில் ஏற்படும் தீர்க்கப்படக் கூடிய பிழைகள் (Recoverable errors) அந்த டிஸ்க் பயனற்றது எனக் காட்டாமல் இருக்கும். அதே போல, ஹார்ட் டிஸ்க்குகளில் பதியப்படும் பல்வேறு ட்ரைவர் புரோகிராம் கள், குறிப்பாக வீடியோ ட்ரைவர் புரோகிராம்கள், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகத்தைக் குறைக்கும். சிபியு வேக சோதனை, பல்வேறு துணை சாதனங்களில் ஏற்படும் வெப்ப சோதனை, ஹார்ட் ட்ரைவர் பிழைகள் சோதனை, ட்ரைவர் புரோகிராம்களை மேம்படுத்துதல் ஆகிய செயல் முறைகள், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும் பிரச்னையைத் தீர்க்கும்.

5. பிரவுசரை மாற்றுக: பிரவுசர் இயக்கத்தில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலும், வேகத்திலும் இயங்கக் கூடியவையே. பழக்கம் காரணமாக, நீங்கள் ஒரே பிரவுசரை இயக்கிக் கொண்டிருந்தால், இன்னொரு பிரவுசரை இயக்கி, அப்போது கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது என்று கவனிக்கவும். பலரின் கணிப்பில், குரோம் பிரவுசர் வேகமாக இயங்குகிறது. இதனை இதுவரை பயன் படுத்தாதவர்கள், பயன்படுத்திப் பார்க்கலாம்.

6. குப்பையை அகற்றுக: கம்ப்யூட்டரில் குப்பை போல புரோகிராம்களையும் பைல் களையும் குவித்து வைப்பது, கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினைக் குறைக்கும். உதவிடும் புரோகிராம்கள், டூல்பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் எனப் பல புரோகிராம்களை நாம் நம் கம்ப்யூட்டரில் தேக்கி வைக்கிறோம். இவற்றில் சில, கம்ப்யூட்டர் இயங்கும்போதே, இயக்கப்பட்டு பின்னணியில் தொடர்ந்து நாம் அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை நீக்க வேண்டும். விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் தேவைப்படாத பயன்பாட்டு புரோகிராம்கள், கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் வழங்கிய புரோகிராம்கள், பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்கள், நீக்கிய புரோகிராம்களின் தொடர்பு பைல்கள் என இவற்றைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

7. டிபிராக் செய்தல்: கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை டிபிராக் (Defrag) செய்தல் (சிதறிய நிலையில் பதியப் பட்டுள்ள பைல்களை, ஓரிடத்திலேயே இணைந்து இருக்கும்படி அமைத்தல்), கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிட, விண்டோஸ் சிஸ்டம் தரும் வசதி மட்டுமின்றி, அதிகமான அளவில் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன.

மேலே தரப்பட்டுள்ள காரணங்களுடன் இன்னும் பல காரணங்களினால், கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையலாம். இருப்பினும், மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயம் கம்ப்யூட்டரின் வேகம் அதிகமாகும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget