APOLLOPARTHIBAN: எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, September 19, 2011

எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள

நாம் கம்யூட்டரில் எந்த அப்ளிகேஷனில் பணிபுரிந்தாலும் -விளையாட்டினை விளையாடினாலும்-இணைய இணைப்பில் தளங்கள் பார்த்தாலும் மொத்த விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.அதுமட்டும் அல்லாமல் எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனையும் துல்லியமான நேரம் முதற்கொண்டு அறிந்துகொள்ளலாம்.6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.நீங்கள் இதனை இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கம்யூட்டர் யூசேஜ் பச்சை நீறத்தில் வந்துவிடும்.சிகப்பு நிறம் கம்யூட்டர் உபயோகம் இல்லாத நேரத்தினை குறிக்கும்.
நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களை எவ்வளவு நேரம் உபயோகித்தீர்கள் என இதில் உள்ள சார்ட் வைத்து எளிதில அறிந்துகொள்ளலாம்.
எந்த எந்த அப்ளிகேஷனை நீங்கள் திறந்துபார்த்தீர்கள் என அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..
இதில் நேரத்தினையும் செட்செய்துவிடலாம்.. தவிர அன்றைய பொழுதில் நீங்கள் எவ்வளவு நேரம் கம்யூட்டரில் பணிபுரிந்தீர்கள் என்பதனையும் அறிந்துகொள்ளலாம்.
நீங்கள் அப்ளிகேஷன் டேபில் கர்சரை கொண்டு செல்ல எந்த இடத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினீர்கள் என்கின்ற விவரம் தெரியும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
காலாண்டு தேர்வு அடுத்தவாரம் ஆரம்பிக்க இருப்பதால் இன்று எனது மகனை படிக்கசொன்னேன். ஆனால் அவர் படிக்காமல் கம்யூட்டரில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். மாலை வந்ததும் கம்யூட்டரில் விளையாடினாயா என கேட்டேன். இல்லை படித்துககொண்டுஇருந்தேன் -கொஞ்சநேரம்தான் கம்யூட்டரில் விளையாடினேன் என கூறினார். அவரை பக்கத்தில் வைததுகொண்டு இந்த சாப்ட்வேரினை ஓப்பன் செய்து காண்பித்தேன். அவர் எந்த எந்த விளையாட்டினை எவ்வளவு நேரம் விளையாடினார் என துல்லியமாக காண்பித்தது.கொஞ்சநேரம் படித்துவிட்டுகம்யூட்டரில் விளையாடிக்கொண்டு இருந்ததை ஒப்புக்கொண்டார்.இந்த சாப்ட்வேர் விண்டோஸ் சர்வீஸ் பேக் -3 மற்றும் அதற்கு பிறகு வந்த பதிவுகளில் தான் வேலை செய்யும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget