இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9, எக்ஸ்பி சிஸ்டத்தில் வேலை செய்யாது என மைக்ரோசாப்ட் அறிவித்து, அந்நிலையிலிருந்து மாறாமல் உள்ளது. எக்ஸ்பி சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆபத்தானது. அதனை வைத்து இயக்குபவர் களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் எக்ஸ்பி சிஸ்டம் உள்ளவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐத் தாங்களாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.
இந்த தொகுப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு பிரவுசர் மூலம் கூகுள் தேடுதளம் சென்று, ‘
டவுண்லோட் செய்த பைலை உடன் இயக்கினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். இன்ஸ்டால் செய்திடுகையில் மறக்காமல் ‘Install Updates’ என்ற பீல்டில் டிக் செய்து இசைவைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அப்டேட் செய்யப்பட்டு பாதுகாப்பாக இயங்கும். இன்ஸ்டலேஷன் முடிந்தவுடன், விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் இயக்க வேண்டியதிருக்கும்.
நீங்கள் இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தி வந்திருந்தால், நிறைய மாற்றங்களை, நவீன வசதிகளை இதில் காணலாம். இணைய தளங்களை, இடையே நிறுத்தாமல் நிலையாக இறக்கிடும் தன்மை, பிரவுசிங் டேப்களில் மாற்றம், கிராஷ் ஆனால் மீண்டும் இயங்க வசதி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்கள் அல்லது பைல்களைத் தடுக்கும் ஸ்மார்ட் ஸ்கிரீன் பில்டர் ஆகியவற்றைக் காணலாம்.
இதில் ‘InPrivate’ வகை பிரவுசிங் தரப்பட்டுள்ளது. இதில் இயங்குகையில், ஹிஸ்டரி, தற்காலிகமாக இறக்கம் செய்யப்பட்ட பைல்கள், தகவல் படிவங்கள், குக்கீஸ், யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவை, பிரவுசரால் பாதுகாக்கப்படுகிறது. இதனால், வேறு ஒருவர், மற்றொருவர் தேடிய தளங்களைப் பற்றிய குறிப்பு, தகவல்களைப் பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ள இயலாது. அத்துடன், நாம் பார்க்கும் தளங்கள், நம்மைப் பற்றிய தகவல்களை எந்த அளவிற்குத் தெரிந்து கொள்ளலாம் என்பதனையும் நம்மால் வரையறை செய்திட முடியும்.
மேலும், பேவரிட்ஸ் பட்டியலில் தரப்படும் பட்டையில், இணையதளங்களுக்கான தொடர்பு மட்டும் இல்லாமல், அந்த தளங்களுக்கான வெப் ஸ்லைஸ், வெப் பீட் மற்றும் டாகுமெண்ட்கள் காட்டப்படுகின்றன. பிரவுசிங் ஹிஸ்டரியின் அடிப்படையில், எந்த எந்த தளங்களைக் கூடுதலாகப் பார்க்கலாம் என்ற பட்டியலும் தரப்படுகிறது. இணைய தளங்களில் நாம் சில சொல் கொண்டு தேடும் Find ஆப்ஷனுக்குப் பதிலாக, இன்லைன் பைண்ட் டூல் பார் (Inline Find
சிறப்பான செயல்பாடு, எளிதாக பக்கங்களில் தேடிச் செல்லும் வசதி, தரவிறக்கத்தில் புதிய வசதி, எச்.டி.எம்.எல்.5 க்கான சப்போர்ட், கூடுதல் வேகம் என, ஒரு பிரவுசரில் நாம் விரும்பும் அனைத்து அம்சங்களும் இருப்பதால், எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தான் வேண்டும் என எண்ணினால், பதிப்பு 8 ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லது.
No comments:
Post a Comment