எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் புற்றீசல் போல உருவாகின்றன. இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஆன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம் என இங்கு பார்க்கலாம்.
கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஆன்லைன் பரி சோதிப்போம் வாருங்கள்.
- உங்கள் கணினி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.
- உங்கள் கணினியில் Flash Player இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
- அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள் கொடுக்க பட்டிருக்கும்.
- அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு பகுதி தெரியும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து உங்கள் கணினி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் கணினி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.
- அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.
- ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
No comments:
Post a Comment