‘
சோனி,நோக்கியா போன்ற நிறுவனங்கள் எல்லாம் இப்படித்தான் தங்களோட பேரை மட்டும் வெச்சிக்கிட்டு வசதிகள் குறைவாக உள்ள தயாரிப்புகளை அதிகவிலைக்கு நம்மகிட்ட குடுக்குறாங்க. உதாரணமா நோக்கியா 1௦,000/- ரூபாய்க்கு ஒரு மொபைலை சந்தையில விக்குதுன்னா அதைவிட ஆயிரம் ரூபாய் கம்மியா சாம்சங் விக்குற ஒரு மொபைல்ல தொழில்நுட்ப வசதிகள் அதிகமா இருக்கும்.இந்த ரகசியம் நம்மல்ல நெறைய பேருக்கு தெரியாது.
பெரிய நிறுவனங்கள் எல்லாமே இப்படித்தான் அவங்களோட பாப்புலரான பேரை வெச்சிக்கிட்டு நம்மகிட்ட பணத்தை கொள்ளையடிக்கிறாங்க. அந்த வரிசையில பணக்காரர்களுக்காகவே தயாரிப்புகளை தர்ற அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் அதோட தயாரிப்புகள் எல்லாத்தையும் அதிக விலைக்கு தான் வெச்சி விக்கும்.காரணம்? என்னவோ அந்த நிறுவனத்தோட தயாரிப்பை நாம நம்ம கையில வெச்சிருந்தாலே அது நமக்கு கவுரவம் மாதிரின்னு நமக்குள்ள ஒரு எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்த அந்த நிறுவனத்தோட வியாபாரத் தந்திரம் தான்.
இப்படிப்பட்ட ஆப்பிளை காலி பண்ணுறதுக்குன்னே கூகிள் நிறுவனம் கண்டுபிடிச்சி கொண்டு வந்தது தான் மொபைலுக்கான இலவச ஆன்ட்ராய்டு ஒ.எஸ். ஒரு திறந்து விடப்பட்ட மென்பொருளான இந்த மென்பொருள் உள்ள மொபைல் உண்மையிலேயே ஒரு சூப்பரான மொபைல் தான் போங்க. சொல்லப்போனா இந்த மென்பொருள் உள்ள மொபைலை நாம எப்படி வேணாலும் யூஸ் பண்ணலாம். நாமலே தனியா ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி பயன்படுத்த முடியும்.பெரும்பாலும் இந்த வகையான மொபைல்கள் பிராப்ளம் ஆனதே கிடையாது.பொதுவா ஒரு போனுக்கு சாப்ட்வேர் அப்டேட் பண்ணும் போது ஏதாவது பிரச்சனையானா போன் டெட்(DEAD) கண்டிஷனுக்கு போயிடும். பிறகு அதை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு போனாதான் அதை உயிர்ப்பிக்க முடியம்.ஆனா ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள ஒரு மொபைலுக்கு நீங்க சாப்ட்வேர் அப்டேட் பண்ணும் போது ஏதாவது பிரச்சனையானா கவலையே படாம போனை ஒருமுறை ரீ-ஸ்டார்ட் பண்ணினாப் போதும்.போன் ஆன் ஆயிடும்.ஏற்கனவே இருக்குற சாப்ட்வேர் அப்படியே வேலை செய்யும்.இது தான் கூகுளோட ஸ்பெஷாலிட்டி.
அதேமாதிரி ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள மொபைல்ல முன்னிருப்பாக(DEFAULT) இருக்குற பிரௌசர் ரொம்ப வேகமா இருக்கும். அதாவது 40,000 ரூபாய் விலைக்கு விக்கிற ஐ-போனை விடவும் வெறும் 7000 ரூபாய்க்கே கெடைக்கிற இந்த ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள மொபைலோட பிரௌசரோட வேகம் 80 சதவீதம் அதிகமாம். அதேமாதிரிவயர்லெஸ் நெட்வொர்க்கை இணைக்குறதுல ஆப்பிள் ஐ-போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குமாம். நாம பயன்படுத்துற மொபைல்ல உள்ள பிரச்சனையே இணையவேகம் தான். ஆனா இதிலேயும் அந்த குறையை தீர்க்குறதுல கூகுள் தான் முதல்ல நிக்குதாம்.
ஐ-போனில் பொதுவாக உள்ள குறைபாடுகள் :
# ப்ளுடூத் மூலமா மத்தவங்களுக்கு பாடல்கள்,வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்துக்க முடியாது.
# 3G போனா இருந்தாலும் முன்பக்க கேமரா மூலமா வீடியோ-கால் செய்ய முடியாது.
# ப்ரௌசருக்கு பிளாஷ்(FLASH PLAYER) சப்போர்ட் கிடையாது. இதனால நிறைய மல்டிமீடியா இணையதளங்களை நம்மால முழுமையா பார்க்க முடியாது.
# சிம்பியன்,ஆன்ட்ராய்டு போன்கள்ல பாப்புலரா இருக்குற விட்ஜெட் வசதி கிடையவே கிடையாது.
# இன்பில்ட்டா வர்ற பேட்டரியை வெளியில எடுக்க முடியாது.
# கணிணியில இருக்குற ஐ-டீயூன்ஸ் மென்பொருள் மூலம் மட்டும் தான் மொபைல்ல பாடல்கள்,வீடியோக்கள்,அப்ளிகேஷன்கள் இதையெல்லாம் பதிவேற்றம் செய்ய முடியும்.
# இலவச அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யனும்னா கூட முதல்ல நீங்க உங்க சொந்த காசைப்போட்டு ‘அப்ஸ்டோர்’ல ஒரு அக்கௌண்ட் ஆரம்பிச்சாதான் முடியும்.
# போன் நம்பர்களை மொத்தமா நீக்க முடியாது.ஒவ்வொன்னா தான் போன்ல இருந்து நீக்க முடியும்.
# எப்.எம் ரேடியோ கிடையாது
# ஐ-போனோட பேட்டரி திறன் ஒரு நாளைக்குதான் வரும்.
மேல ஐ-போன்ல சொன்ன எந்த குறைகளும் கூகுளோட ஆன்ட்ராய்டு போன்கள்ல கிடையாது. அதுதான் கூகுள் வெற்றியோட உச்சம்.
அதுவும் சரிதாங்க..வெறும் ஆயிரம் ரூபாய் குடுத்து வாங்குற போன்ல கூட எப்.எம் ரேடியோ இருக்கு. ஆனா நாப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் விக்குற ஆப்பிள் ஐ-போன்ல எப்.எம் கெடையாது.எதையுமே வாங்குறதுக்கு முன்னாடி ஒருதடவைக்கு ரெண்டு தடவை யோசிங்க...(குறிப்பா பிரபல கம்பனிகளோட தயாரிப்புகளை வாங்குறப்போ இது ரொம்ப முக்கியம்.
)
)
goood news wel come parthiban
ReplyDelete