APOLLOPARTHIBAN: உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, July 18, 2011

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க


நமது கணிணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான்.உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.

இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.

முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
Notepad

பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
Notepad Save As

Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்.

Notepad Save dialog

பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும்.இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம.உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்.

கீழே நான் நிறுவி உள்ள Avira ஆண்டிவைரஸ் check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்வதை கீழே காணலாம்.

avira virus alert

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget