இப்போதெல்லாம் தினம் தினம் புதிது புதிதாய் வைரஸ் வந்துக்கொண்டே இருக்கின்றன. அதை எப்பாடுபட்டேனும் தவிர்த்திட ஆன்ட் வைரஸ் மற்றும் தடுப்பு மென்பொருள் சந்தையில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.. சில ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் தயாரிப்பாளர்களே கூட வைரஸை பரவ விட்டு அதற்குரிய சொல்யூசனை கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்த இந்நிலையில் பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸை தடுக்க என்றே புதிய இந்த மென்பொருள் வெளியிட்டிருக்கிறார்கள்..அதுவும் இலவசமாகவே..
நமது கணினியைவிட நாம் உபயோகிக்கும் பென்டிரைவால் தான் நமக்கு பெரிய தொல்லைகளே வந்து சேரும்.. அவ்வப்போது வேறு சில கணினியில் வெளியில் சென்று கூட சிலவேளையில் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்போது நமக்குத் தெரியாமலேயே பென்டிரைவில் வைரஸ் மற்றும் மால்வேர்கள் என்ற நச்சு நிரலியும் நமது பென்டிரைவில் தஞ்சம் புகுந்து கொண்டு நாம் எப்போதெல்லாம் நமது கணினியில் பென்டிரைவை கணினியில் பொருத்துகிறோமே அப்போதெல்லாம் நமது அனுமதியில்லாம் அந்த வைரஸ்கள் நமது கணிணியில் குடிகொண்டு விடும்..
பிறகென்ன தாங்கள் வந்த வேளையை செவ்வனே செய்து கொண்டிருக்கும்.. அதுவும் இணைய இணைப்பில் உள்ள கணினி என்றால் துவம்சம் செய்து விட்டுத்தான் விடும்.
இவ்வாறு நமது கணினியை நாசம் செய்யும் மால்வேர்கள் மற்றும் வைரஸ் அறவே ஒழித்து கட்டுகிறது இந்த மென்பொருள்.. குறிப்பாக auto run.inf என்று சொல்லக்கூடிய நச்சு நிரலியை ஓரங்கட்டி தடுத்து விடுகிறது.
இனி நமது கணினியில் பென் டிரைவ் மூலம் எந்த ஒரு வைரஸையும் தடுத்து நிறுத்தும் பணியை செய்கிறது..
தரவிரக்க சுட்டி இங்கு கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment