தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து நண்பர்களுடன் விவாதித்து கொண்டிருக்கும் போதுசக்கரத்திலிருந்து ஆரம்பித்த விவாதம் முகில் கணினியகம் வரை சென்று முடிந்தது . சக்கரம் கண்டுபிடித்த பிறகே மனித நாகரிகம் மிக வேகமாக வளர்ந்தது . அதன் பிறகு அசாத்திய கண்டுபிடிப்பு என்றால் அது கணினி.
கணினி கண்டுபிடிக்கபட்ட 40 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி ,இப்போது மனிதன் கண்டுபித்த அத்தனைக்கும் கணினியின் பங்கு ஏதோ ஒருவகையில் பயன்பட்டுகொண்டிருக்கிறது.
நான் "ஹார்ட்வேர் இன்ஜினீயர்" என்ற புத்தகம் எழுதுவதற்காக கணினியின் ஆரம்பகாலம் குறித்து தேடி படித்தது இப்போது ஒருமுறை பயன்பட்டது.கணினி தொழில்நுட்பத்திற்கு ஆரம்பமாக "ஆபக்கஸ்" -ஐ காட்டுகின்றனர்.இது மணிச்சட்டம் கொண்ட ஒரு சிலேட். கணிதத்தை எளிதாக பயன்படுத்துவதர்க்காக இதை கண்டுபித்தனர். அதன் பிறகு கணிதத்தை எளிதாக்குவதற்கு ஒரு எந்திரத்தை கண்டுபிடிப்பதில் பலர் முயற்சி செய்தனர்.(நேப்பியர்,ஆர்த்ரெட்,பாஸ்கல்,சார்லஸ் பபேஜ் )பிறகு ஹெர்மன் ஹோலரித் மக்கள் தொகை கணக்கெடுப்பிர்க்காக டேபுலட்டிங் மெசின் ஒன்றை உருவாக்கினார் ,பின்னாளில் இவர்தான் (ஐ.பி.எம் )நிறுவனத்தை நிறுவினார்.
அப்போதிருந்த கணினிகள் வெற்றிட குழாய்கள் (vaccum tube) கொண்டு வடிவமைக்கப்பட்டன.இதனால் உருவத்தில் மிக பெரியது ,எடையில் பல நூறு கிலோவும் இருந்தன.
டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது கணினி தொழில்நுட்பத்தின் அடுத்த திருப்புமுனையாகஅமைந்தது.வெற்றிட குழாய்கள் நீக்கப்பட்டு ,டிரான்ஸ்சிஸ்டர் பயன்படுத்தப்பட்டதால் கணினியின் அளவும்,எடையும் சிறியதாக மாறியது..
டிரான்ஸ்சிஸ்டர்-ஐ இன்னும் எவ்வாறு சுருக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஐ.சிகண்டுபிடிக்கபட்டது.
பல ஐ.சி சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் நுழைக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இன்டெல் நிறுவனத்தின் ராபர்ட் நைஸ் என்பவர் மைக்ரோபிராசசரை கண்டுபிடித்தார்.
மைக்ரோப்ராசசர் கண்டுபிடிக்கப்பட்டபிறகு கணினியின் மிகவும் சிரியதானது.மேசை கணினி,மடிக்கணினி,கைகணினி என்று அளவில் சுருங்கிக் கொண்டே செல்கிறது.
கணினியின் பரிணாம வளர்ச்சி
No comments:
Post a Comment