APOLLOPARTHIBAN: உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆக ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, July 18, 2011

உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆக ?


இணையம் உபயோகிப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் பயனை
அனுபவிக்கின்றனர். இணைய நிறுவனங்களில் கூகுள் தான் எப்பொழுதும் முதல் இடம்.

கூகுள் பல வசதிகளை நமக்கு வழங்கி வருகிறது. நம்முடைய செய்திகளை உடனுக்குடன் பகிர Google Buzz, நம்முடைய புகைப்படங்களை பகிர Picasa , தற்பொழுது புதிய வசதியாக இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர Google Plus என இதன் சேவைகள் நீள்கிறது.
நாம் இந்த தளங்களில் தகவல்களை பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அந்த தளங்களில் பகிர்ந்த அனைத்து தகவல்களையும் தரவிறக்கம் செய்ய முடியும்.
இதற்கு முதலில் இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளத்திற்கு சென்றவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அங்கு உள்ள அனைத்து சேவைகளில் இருந்தும் தகவல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் அங்கு உள்ள CREATE ARCHIVE என்பதை கொடுக்கவும் அல்லது குறிப்பிட்ட ஒரு தளத்தில் பகிர்ந்த தகவல்களை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் Choose Services என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CREATE ARCHIVE கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி தரவிறக்க வசதி வரும். அந்த தரவிறக்க பட்டனுக்கு அருகில் உங்கள் கோப்பு மொத்த அளவு, எண்ணிக்கை ஆகியவை வந்திருக்கும். அடுத்து நீங்கள் Download என்ற பட்டனை அழுத்தவும்.
Download பட்டனை அழுத்தியவுடன் உறுதிபடுத்த உங்களின் பயனாளர் பெயர், கடவுச் சொல் கேட்கும். அதை சரியாக கொடுத்தால் போதும். அடுத்த வினாடி உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும்.

1 comment:

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget