APOLLOPARTHIBAN: Software >> இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, July 18, 2011

Software >> இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை






இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகித்து மகிழ்கின்றோம். ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணினி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் சில .

இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்ரோல் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஒன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.

எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிருங்கள் ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள் ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது. இலவச மென்பொருட்களை தொகுத்து வழங்கும் தளங்களானCnet.com , brothersoft.com மற்றும் சில தளங்களில் இருந்தே டவுன்லோட் செய்யவும்.

தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்தாலும் கூட நாம் டவுன்லோட் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்து டவுன்லோட் செய்யவும்.குறிப்பாக Cnet.com தளத்தில் டவுன்லோட் செய்யும் போது அதனுடைய Product Ranking 1 முதல் 2 வரை உள்ள மென்பொருட்களை மட்டுமே டவுன்லோட் செய்யவும்.

எந்த தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யும்போது மொத்த டவுன்லோட் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை டவுன்லோட் செய்தார்கள் என்று பார்த்து அதிகம் பேர் பார்த்து இருந்தால் அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது ஆகவே அந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளவும்.ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள்.

இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget