தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் அறிமுகம்!
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணைய தளத்தில் பெறும் வசதி தமிழகம் முழு வதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) அறிமுகப் படுத்தப்படுகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கும், வயது தொடர்பான ஆவணங்களுக்கும் பிறப்பு சான்றிதழ் மிக மிக அவசியம். இதேபோல், விபத்து அல்லது நோயினால் உயிரிழந்தவர்களின் இறப்பை உறுதி செய்யும் வகையில், சொத்து, வாரிசு, ஓய்வூதியம் போன்றவற்றுக்கு இறப்பு சான்றிதழ் முக்கியமானது ஆகும். பிறப்பு -இறப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்டவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் பிறப்பு சான்றிதழ்கள் முன்பு கிராம நிருவாக அதிகாரிகள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பிறப்பு சான்றி தழ்கள் வழங்கப்படுகின் றன. பிறப்பு சான்றிதழ் களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெறு வதில் காலதாமதம் ஏற்பட்டு கிராம மக்கள் மிக வும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இணைய தளத்தில் பிறப்பு -இறப்பு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசின் பொது சுகாதார இயக் குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த வசதியை செயல்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்களுக்கும், பணியாளர்க ளுக்கும் தீவிர கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இணைய தளத்தில் இந்த வசதி அமல்படுத்தப்படும் பட்சத்தில் கிராம மக்களுக்கு பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் விரைவாக கிடைப்பது டன் பிறப்பு-இறப்பு விவரங்களை கையாள்வதற்கு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும். பெயர், பிறந்த அல்லது இறந்த தேதி உள் ளிட்ட விவரங்களை குறிப்பிட்டால் நொடியில் சான்றிதழ் கிடைத்துவிடும். தேவைக்கேற்ப கூடுதல் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இணைய தளத்தில் பிறப்பு-இறப்பு சான்றி தழ்களை பெறும் வசதியை அடுத்த மாதம் (செப்டம்பர்) அறிமுகப்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ப, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்பட்டு வரும் கம்ப்யூட்டர் பயிற்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் பயிற்சியை முடிக்க திட்டமிட்டுள் ளார்கள். இணைய தளத்தில் சான்றிதழ்கள் விண்ணப் பதாரர்களின் விருப்பத் திற்கு ஏற்ப தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வழங்கப்படும். இதற்கான சிறப்பு மென்பொருள் தேசிய தகவல் மய்யம் (நிக்) உருவாக்கி உள்ளது. அந்த மென்பொருள் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்க ளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment