இன்று கம்ப்யூட்டர் சார்ந்து நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு துணை சாதனம் எது என்றால் அது பிளாஷ் டிரைவ், பென் டிரைவ் மற்றும் தம்ப் டிரைவ் என அழைக்கப்படும் போர்ட்டபிள் பிளாஷ் டிரைவ் தான். எனவே இவற்றைப் பயன்படுத்துகையில் சிக்கல்கள் ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படத்தான் செய்திடும். பல வாசகர்கள் தங்கள் யு.எஸ்.பி. போர்ட்டில் பிளாஷ் டிரைவ்களைச் செருகுகையில் சிஸ்டம் அவற்றைக் கண்டு கொள்ள மறுக்கிறது என்றும் அதனை எப்படி சரி செய்திடலாம் என்றும் கேட்டு கடிதங்களை எழுதியுள்ளனர். மேலும் பலர் வேறு வகையான பிரச்னைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர். அவற்றிற்கான சில தீர்வுகளை இங்கு காணலாம். முதலில் யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள இரண்டு வகைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த இரண்டில் எது தங்களிடம் உள்ளது என்று தெரிந்து கொள்வது எப்படி என்று பல வாசகர்கள் வினா எழுப்புகின்றனர். மாடலைத் தெரிந்து கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படவும். Start>
நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும். ஆனால் பலர் தெரிவித்துள்ள பிரச்னை என்னவென்றால் தாங்கள் யு.எஸ்.பி. தம்ப் டிரைவைச் செருகினால் அதனை கம்ப்யூட்டர் அறிந்து கொள்வதே இல்லை என்பதே. பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் எக்ஸ்பி புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும்.
அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை இயக்கவா? விடியோ பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைக் கீழ்க்கண்டவாறு சரி செய்திடலாம். Start/
நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப்படாததாக இருக்க வேண்டும். இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும். இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் கன்சோலை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.
யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும். அதுவும் விண்டோஸ் 2000 இயக்கத்தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும். இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன
No comments:
Post a Comment