இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்
Advanced Call Manager
இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது தானாக பதில் சொல்லும் அதில் அவருக்கே பணம் செலவாகும் வேண்டுமானால் எப்போது தொடர்பு கொண்டாலும் உங்கள் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் நீங்கள் விரும்பினால் மட்டும் உங்களோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கலாம்.
Auto Call Recorder
இந்த Auto Call Recorder உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கும் வரும் அழைப்புகளையும் நீங்கள் தொடர்பு கொள்ளும் அழைப்புகளையும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யும் வசதி இருகிறது இதை உங்களுக்கு தேவைபடும் போது மட்டும் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் தானியங்கியாக ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
Browser
இந்த Browserஉங்கள் அலைபேசியில் இருந்து இனையத்தில் உலவ நல்ல வசதிகளை தருகிறது இது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.
FM Manager
இந்த FM Manager உங்கள் அலைபேசியில் எப் எம் வசதி இருந்தால் அதை மேலும் மேம்படுத்திகொள்ள இதில் நிறைய வசதிகள் இருக்கிறது FM உள்ள அலைபேசிகளில் மட்டுமே இது பயன்படும்.
Full Caller Screen
இந்த Full Caller Screen சாதரணமாக நோக்கியாவில் அழைப்பு வரும்போது அவர்களின் போட்ட்வையும் காணும் வசதி இருக்கிறது ஆனால் சிறிய அளவில் இருக்கும் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டால் முழுத்திரை அளவிற்கு அழைப்பு வரும்போது போட்டோவின் அளவு இருக்கும்.
Games
இந்த Games தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட உதவும்.
Mobile Talk
இந்த Mobile Talk பொட்டலத்தை தரவிறக்கி இதில் நீங்கள் விருப்பபடும் மென்பொருளை உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே இலவசம் தான் என்ன எல்லாவற்றிற்கும் இனைய வசதி வேண்டும்.
MP3 Player
இந்த MP3 Player நல்ல தரத்துடன் இசையை கேக்க உதவுகிறது உங்களுக்கு தகுந்தமாதரி ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாக யூக்கலேசர் செய்து சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது இது நிச்சியம் உங்களுக்கு பிடிக்கும்.
Msg and Personal File Locker
இந்த Msg and Personal File Locker தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்கள் அலைபேசியில் எந்தெந்த தகவல்கள் மறைக்க நினைக்கிறீர்களோ அத்தனையையும் மறைத்து வைத்துக்கொள்ளலாம் நீங்கள் உபயோகபடுத்தி பாருங்கள் சந்தோஷப்படுவீர்கள்.
Periyar Varalaru
இது தந்தை Periyar Varalaru உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டு படிக்க உதவுகிறது இதில் புக்மார்க் வசதியும் இருக்கிறது விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Thirukural
இந்த Thirukural புத்தகத்தை தரவிறக்கி அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருக்குறல் உங்கள் விரல் நுணியில் விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Smart Movie
இந்த Smart Movie மென்பொருள் உங்கள் வீடியோவை பார்க்கும் வசதியை மேம்படுத்தி தருகிறது முக்கியமாக எளிதான பார்வேர்டு ரீவைண்ட் வசதி இதில் தவிர்க்க முடியாதது.
Sms Guard
இந்த Sms Guard மென்பொருள் உங்கள் அலைபேசியில் இருக்கும் குறுந்தகவல்களை மறைக்க உதவி செய்கிறது இருந்தாலும் இதன் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன் நீங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு கருத்துரையில் சொல்லவும்.
Type Tamil SMS
இந்த Type Tamil SMS மென்பொருள் தமிழில் எழுத உதவுகிறது அதாவது தமிழ் மொழியை ஆதரிக்காத அலைபேசியிலும் தமிழில் எழுத முடியும்.
Window 7 Theme
இந்த Window 7 Theme தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு வித்யாசமான தீம் உங்கள் அலைபேசியில் இருக்கும்
Voice Recorder
இந்த Voice Recorder இரண்டு விதமாக பயன்படுகிறது ஒன்று வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய இயலும் மற்றொன்று சாதாரண முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும் தேவையென்றால் தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்
Wi Fi
இந்த Wi Fi மென்பொருள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கே தெரியும் இதன் உபயோகம் என்னவென்று.
No comments:
Post a Comment