கூகிள் வழங்கும் மிகப்பெரிய சேவைகளில் ஒன்றான ஜீமெயிலில் மேம்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டு அம்சங்களில் ஒன்றான கூகிள் லேப்ஸ் (Google Labs ) எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglcWixsnpQgUGIzWKbk0JgwOMe8H8041T6AOrZMKAzL3YJoBtzdwneNXt-D5FLx8c_mwP3ikAIvsozGYURbhIGD2h01kiEUIam6AMQOEluYW-8m9KRdvtCn-7UH4idUHXAGuSMQivyR9id/s320/labs1.jpg)
படம் 1
கூகிள் கொடுக்கும் சேவைகளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் அதனால் கட்டுண்டு கிடப்பதற்கு காரணம் அதன் சேவைகள் தான், இலவசம் என்று கொடுக்கும் எந்த நிறுவனமும் சேவைகளில் முன்னுரிமை கொடுக்காத நேரத்தில் சொல்லப்போனால் நாளும் ஒரு சேவை அதுவும் மிகவும் சிறப்பான சேவை என்று நம் மனதில் இடம் பிடிக்கின்றனர். ஜீமெயில் பயனாளர்கள் கூகிள் லேப்ஸ் எப்படி பயன்படுத்துவதைப்பற்றி இனி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.gmail.com
படம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhETJ-5a35JYiLZMSkE_1_R34MzDUHSl1sWTkhvyGQDlKe8OgejOBBTSdkXwznm9CJJ3OBqep2xsIrfO7Xx6IrnwKIuK41alyvk5PECQzYQEKi6M64Fjq0Bfm8BLshXWN-f7Cu55PWDdruy/s320/labs2.jpg)
2
ஜீமெயில் தளத்தில் பயனாளர் கணக்கு இல்லாதவர்கள் தங்களுக்கென்று ஒரு ஜீமெயில் கணக்கு இலவசமாக உருவாக்கிக் கொள்ளவும். ஏற்கனவே ஜீமெயில் கணக்கு உள்ளவர்கள் தங்கள் கணக்கை பயன்படுத்தி ஜீமெயிலில் தங்கள் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து வலது பக்கம் மேல் இருக்கும் படம் 1-ல் காட்டியபடி Settings ஐகானை சொடுக்கி Mail Settings என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்கவும். அடுத்து வரும் திரையில் Labs என்ற மெனுவை தேர்ந்தேடுக்கவும். இதில் பலவகையான Labs சேவைகள் கிடைக்கிறது. இதில் நமக்கு வேண்டிய எந்த சேவை பிடித்திருக்கிறதோ அதன் பக்கத்தில் இருக்கும் Enable என்ற ஆப்சன் -ஐ தேர்ந்தெடுத்துவிட்டு Save Changes என்ற பொத்தானை அழுத்தவும். இனி நாம் தேர்வு செய்த கூகிள் லேப்ஸ் நம் ஜீமெயிலில் பயன்படுத்தலாம். உதாரணமாக நாம் Search for a lab என்ற கட்டத்திற்குள் undo என்று தட்டச்சு செய்யவும் இப்போது Undo Send என்ற லேப்ஸ் ஒன்று காட்டப்படும் இதன் அருகில் இருக்கும் Enable என்பதை சொடுக்கி பின் Save changes என்ற பொத்தானையும் அழுத்தவும். இப்போது நாம் தேர்ந்தெடுத்த கூகிள் லேப்ஸ்-ன் பயன் யாதெனில் ஒருவருக்கு நாம் மெயில் அனுப்பிய ஒரு சில நொடிகளுக்குள் Undo அதாவது திரும்ப பெற்று கொள்ளலாம்.இதே போல் கூகிள் லேப்ஸ் -ன் ஒவ்வொன்றையும் எளிதாக பயன்படுத்தலாம். கண்டிப்பாக கூகிள் லேப்ஸ் பற்றி தெரியவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment