APOLLOPARTHIBAN: ஜிமெயிலை கேவலபடுத்திய மைக்ரோசாப்ட் [வீடியோ]

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, August 2, 2011

ஜிமெயிலை கேவலபடுத்திய மைக்ரோசாப்ட் [வீடியோ]

இணையத்தில் பெரிய நிறுவனங்களிடம் மிகப்பெரிய போர் நடந்து கொண்டுள்ளது. இணைய துறையில் ஜாம்பவானான கூகுளுக்கும் கணினி துறையில் ஜாம்பவானான மைக்ரோசாப்ட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக தொழில் போட்டி உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். கூகுள் சர்ச் எஞ்சினுக்கு போட்டியாக பிங் தேடியந்திரத்தையும், ஜிமெயிலுக்கு போட்டியாக ஹாட்மெயில் சேவையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இப்பொழுது கூகுள் வெளியிட்டிருக்கும் சமூக தளமான கூகுள்+ தளத்திற்கு எதிராக புதிய சமூக தளத்தை மைக்ரோசாப்ட் வெளியிடவுள்ளது. இவ்வாறு இவர்களின் தொழிற் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.




இந்த போட்டியே நாளடைவில் ஒருவருடைய தயாரிப்பை ஒருவர் குறை கூறும் அளவிற்கு இவர்களை இழுத்து சென்றுள்ளது. மைக்ரோசாப்ட் ஏதேனும் புதிய தயாரிப்பை வெளியிட்டால் அதை கூகுள் குறை கூறுவதும் கூகுள் ஏதேனும் தயாரிப்பை வெளியிட்டால் அதை மைக்ரோசாப்ட் குறைகூறுவதும் சில காலங்களாக நடந்து வருகிறது.

சமீப காலமாக எந்த பிரச்சினையும் எழாமல் அவரவர் வேலையை ஒழுங்காக பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் ஜிமெயில் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டதுSave your friends from outdated email என்பதாகும். மற்ற ஈமயில் நிறுவனங்களில் உள்ள உங்கள் நண்பர்களை ஜிமெயில் கணக்கில் வரவைக்க உண்டாக்காப்பட்ட வசதியாகும். இதில் Outdated email என்று மற்ற ஈமெயில் நிறுவனங்களை சுட்டிகாட்டியது.

இதில் மைக்ரோசாப்டின் ஹாட்மெயிலும் அடங்கி இருப்பதால் மைக்ரோசாப்ட்டும் ஜிமெயிலை குறை கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு கோவத்தை வெளிபடுத்தியுள்ளது. அதில் ஜிமெயிலில் தனித்தன்மை இல்லை எனவும், ஜிமெயிலில் விளம்பரங்கள் வெளிவருவதை குறை கூறியும் இந்த வீடியோவை உருவாக்கி உள்ளது.


இந்த வீடியோ உலகம் முழுவதும் பெரிதும் பரபரப்பாக பார்க்கபட்டு கொண்டிருக்கப்படுகிறது. ஜிமெயில் தரப்பில் இருந்து வாசகர்கள் தேவையென்றால் அந்த விளம்பரங்களை தடைசெய்து கொள்ளலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. மாறாக மைக்ரோசாப்ட் மீது எந்த குறையையும் இது வரை கூகுள் தெரிவிக்கவில்லை. (தேடி போய் ஆப்பில் உட்கார்ந்து கொள்வது இது தானோ)

அடுத்து கூகுளின் நடவடிக்கை என்னென்று பொறுத்திருந்து பார்ப்போம். எவன் அடிச்சிக்கிட்டா என்ன நம்ம ஜாலியா வேடிக்கை பார்ப்போம். வேடிக்கை பார்க்கிறதுல இருக்கிற சுகம் தமிழன தவிர வேர யாருக்கு தெரியும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget